ஈரோடு: தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள, வங்கி மற்றும் மத்திய அரசு பணியாளர்களுக்கான பயிற்சி, தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் தலைமையில், ஈரோட்டில் நடந்தது.
இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் கதிரவன் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை, உடனடயாக பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களை கண்காணிக்க, 127 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆண், பெண் வாக்காளர்களை தனித்தனியாக ஓட்டுப்போட வழி செய்ய வேண்டும். ஓட்டுப்பெட்டி நன்றாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும். போதுமான மை உள்ளதா என கண்காணிக்க வேண்டும். தேர்தல் பார்வையாளருக்கான கைபேசி எண், 6385715486, 8903919275ல், நுண் பார்வையாளர்கள் வாட்ஸ் ஆப், குறுஞ்செய்தி, மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல், புகார்களை தெரிவிக்கலாம். தேர்தல் நடக்கும், 14 யூனியன்களிலும், மண்டல குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மண்டல குழுவுக்கு ஒரு அலுவலர், உதவியாளர், வாகனஓட்டுனர் என மூவர் வீதம், 135 குழுக்களில், 540 பேர் இடம் பெறுவர். ஓட்டுப்பதிவின்போதும், ஓட்டுப்பதிவு முடிந்த பின்னரும், தேர்தல் ஆணைய விதிப்படி பெட்டிகளை எடுத்து செல்ல வேண்டும். இவற்றை நுண் பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment