Friday, 27 December 2019

மதுரையில் 1,356 பதவிகளுக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மேலூர், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூர் வாடிப்பட்டி உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

11 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர். 102 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 101 வார்டுகளுக்கு 407 பேர் போட்டியிடுகின்றனர். 188 ஊராட்சிகளில் 8 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 180 ஊராட்சித் தலைவர்களுக்கு 675 பேர் போட்டியிடுகின்றனர். 1,506 கிராம ஊராட்சி வார்டுகளில் 442 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 1,064 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 1,356 பதவிகளுக்கு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. 939 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன். மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமையில் 2 ஏடிஎஸ்பி , 20 டிஎஸ்பி, 60 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்ட தேர்தலில் 5,11,403 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 2,52,637 ஆண் வாக்காளர்களும், 2,58,753பெண் வாக்காளர்களும், 13 இதர வாக்காளர்களும் அடங்குவர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...