Wednesday, 18 December 2019

வியாபாரியை மயக்கி 1கிலோ தங்கம் கொள்ளையடித்த அழகி யார்?


கைதி இறந்த சம்பவம் குறித்து டிஐஜி பாலகிருஷ்ணன் கூறுகையில், கடந்த 25ம் தேதி திருச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு நிதின்முரளி என்பவர் 1 கிலோ நகையுடன் பஸ்சில் சென்றார். அப்போது சமயபுரம் 4 ரோட்டில் இருந்து அந்த பஸ்சில் 8 பேர் ஏறினர். இதில் ஒருவர் நிதின்முரளி அருகே அமர்ந்தார். தொடர்ந்து பெண் ஒருவர் நிதின்முரளியிடம் நெருங்கி அவரது கவனத்தை திசை திருப்பி உள்ளார். இந்த நிலையில் பேக்கில் இருந்த1 கிலோ தங்கத்தை அபேஸ் செய்தனர்.1 மணிநேரம் கழித்து தான் தங்கம் பறிபோனது நிதின்முரளிக்கு தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிந்து சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் இறந்து போன முருகன் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடீரென முருகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து வழக்குபதிந்து ஜேஎம் 3 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற நடுவர் விசாரணை நடத்தினார். தொடர்ந்து மற்றவர்களும் வாக்குமூலம் அளித்தனர். இதற்கிடையில் எஸ்ஐ உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிக்கியவர்களில் அவர்கள் மீது பழைய வழக்குகள் உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்படும். இதுகுறித்து மேலும் விசாரணைநடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...