Monday, 16 December 2019

சீன நாட்டு மாகாண அமைச்சர்கள் 30 பேர் மாமல்லபுரம் சுற்றுலா வருகை


சீன நாட்டின் பிஜியன் மற்றும் குவான்ஷோ மாகாண அமைச்சர்கள் 30 பேர் திங்கள்கிழமை மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். சீன அதிபர் சுண்டுகளித்த புராதனச்சின்னங்களை பார்த்து ரசித்து படம் எடுத்துக்கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் மற்றும் நரேந்திரமோடி வந்துசென்றபிறகு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சீன நாட்டு மாகான அமைச்சர்கள் குழுவின் ஒருபகுதியினர்

நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளால் மாமல்லபுரம் களைக்கட்டி வருகிறது. குறிப்பாக சீன அதிபரின் வருகைக்குப்பிறகு சீனநாட்டைச்சேர்ந்த சுற்றுலா பயணிகள் , கல்லூரி மாணவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மென்பொருள் உற்பத்தியாளர்கள், பொறியியல் வல்லநர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை சீனாவில் உள்ள பிஜியன், குவான்ஷோ ஆகிய 2 மாகாணங்களைச்சேர்ந்த 30 பேர் மற்றும் அவர்களின் பாதுகாப்பு பிரிவில் உள்ள 10 ஐபிஎஸ் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 40 பேர் கொண்ட குழுவினர் மாமல்லபுரம் வருகை தந்தனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...