Wednesday, 18 December 2019

332244 என்று சொன்னால் ஹெச்.ராஜா புரிந்துகொள்வார்... கலாய்த்த கார்த்தி சிதம்பரம்


திருச்சி: பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு தாம் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புவதாகவும், 332244 என்பதை அவர் மறந்திருக்க மாட்டார் என்றும் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து தனது தொகுதியான சிவகங்கை செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் அவர் இதனைக் கூறினார்.

மேலும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்க்கும் விவகாரத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இணைந்து எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரத்திடம், அடுத்தது நீங்கள் தான் கைதாக போகிறீர்கள் என ஹெச்.ராஜா கூறுகிறாரே எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கார்த்தி, ஹெச்.ராஜாவிடம் ''332244'' என்பதை மட்டும் கூறுங்கள் போதும், அவர் புரிந்துகொள்வார் எனவும் பதில் தந்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்ட ஹெச்.ராஜா, மூன்று லட்சத்து 32 ஆயிரத்து 244 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதைக் குறிப்பிடும் வகையில் கார்த்தி சிதம்பரம் இந்த கோர்ட் வார்டை தெரிவித்தார்.

ஹாங்காங், சிலி போன்ற நாடுகளில் எப்படி தன்னெழுச்சியாக போராட்டம் நடைபெறுகிறதோ அதைப் போல் இங்கும் தார்மீக அடிப்படையில் சமூக ஆர்வலர்கள், மானவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற அதிமுகவும் ஒரு காரணம் என்றும், சில மாநிலக் கட்சிகள் பாஜகவின் கைகூலிகளாக உள்ளதால் ராஜ்யசபாவில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...