Monday, 16 December 2019

மாவட்டத்தில் 35 சதவீதம் கூடுதல் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை:கோவை மாவட்டத்தில், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை, 35 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை, பரவலாக துாறல் மழை பெய்தது. காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பதிவான மழை வருமாறு:ஆழியாறு 13 மி.மீ., அன்னுார் 6, கோவை விமான நிலையம் 6, சின்னக் கல்லார் 2, சின்கோனா 11, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் 9, மேட்டுப்பாளையம் 13, பெரியநாயக்கன்பாளையம் 22, பொள்ளாச்சி 9, சோலையாறு 3, சூலுார் 5.4, வேளாண் பல்கலை 10, வால்பாறை பி.ஏ.பி., 5, வால்பாறை தாலுகா அலுவலகம் 4 மி.மீ.,ஆண்டுதோறும் அக்.,1 முதல் டிச.,31 வரை, வடகிழக்கு பருவமழை பெய்யும் பருவமாக கணக்கிடப்படுகிறது. இந்த பருவத்தில்.
கோவை மாவட்டத்தில் நேற்று வரை, 440.5 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இது, இயல்பாக பெய்திருக்க வேண்டிய 326 மி.மீ., மழையை காட்டிலும், 35 சதவீதம் கூடுதலாகும். 'இம்மாத முடிவுக்குள் இன்னும் கோவை மாவட்டத்துக்கு, கூடுதலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளது' என்று, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மாவட்டத்தில் இன்றும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...