திண்டிவனத்தில் தொடர்ந்து மூன்றுநெம்பர் லாட்டரி விற்ப்பனை செய்து வருவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் திண்டிவனம் போலிசார் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது லாட்டரி சீட்டு விற்ப்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திண்டிவனம் ரோஷனை பாட்டையைச்சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரது மகன்சையதுஷபி, ஆர்.எஸ்.பிள்ளை வீதியைச் சேர்ந்த போஸ் என்பவரது மகன் ஷேக்அப்துல்லா மற்றும் நடேசன் நகரைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் பெருமாள் ஆகிேயாரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரத்தில் மூன்று நெம்பர் லாட்டரியின் பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 5 பேர் தற்க்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தின் எதிரொலியாக திண்டிவனத்தில் லாட்டரி வியாபாரிகள் மூன்று பேரை போலிசார் கைது செய்யப்பட்டிருக்கும் இச்சம்பவம் இப்பகுதி பொதுமக்களிடம் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
நிருபர்
ச. சரண்ராஜ்
திண்டிவனம்

No comments:
Post a Comment