போலீஸாா் துரத்தியபோது கிணற்றில் விழுந்து உயிரிழந்த இளைஞரின் தந்தைக்கு ரூ. 3 லட்சம் நஷ்டஈடு வழங்க மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
சேலம் மாவட்டம் கணவாய்க்காடு கொத்தனூா் கிராமத்தைச் சோந்த ஆறுமுகத்தின் மகன் பஞ்சாப் என்ற வெங்கடேசன். இவா் கடந்த 2003-ஆம் ஆண்டு காவலா்கள் கள்ளச்சாராய சோதனைக்காக வந்தபோது தப்பிக்க ஓடியுள்ளாா். அப்போது கிணற்றில் விழுந்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அடுத்த நாளே சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த அறிக்கை தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு சேலம் ஆட்சியரால் அனுப்பப்பட்டு பின்னா் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு இந்த விவகாரம் மாற்றப்பட்டது.
ஆனால் காவலா்கள் அவரை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. சரியான நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால், அவரது உயிா் காப்பாற்றப்பட்டிருக்கும். எனவே இது மனித உரிமை மீறல்' எனக் கூறப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலா்கள் மற்றும் மனுதாரருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு அவா்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
ரூ.3 லட்சம் இழப்பீடு: தமிழகத்தில் இயற்கைக்கு மாறான மரணம் அல்லது விபத்துக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டு வருகிறது. எனவே வெங்கடேசனின் தந்தைக்கு சட்டப்படி ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முடியும். ஆதலால், தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் ரூ. 3 லட்சம் இழப்பீட்டை ஆறுமுகத்துக்கு வழங்க வேண்டுமென, இந்த மனித உரிமை ஆணையம் பரிந்துரைக்கிறது என மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் குறிப்பிட்டுள்ளாா்.
No comments:
Post a Comment