Sunday, 15 December 2019

5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்: ரூ25 லட்சத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணி தொடக்கம்... பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு விமோசனம் பெறுமா?



நாகர்கோவில், டிச.15: நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதால் 5 நாட்கள் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.

நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே உடைந்த சாலையில் காங்கிரீட் போட்டு, பேவர் பிளாக் பதிக்கும் பணி ரூ.25 லட்சம் மதிப்பில் நடக்கிறது. இதனால் டதி பள்ளி ஜங்ஷன் வழியாக வடசேரி வரும் அனைத்து வாகனங்களும் வாட்டர் டேங்க் ரோடு வழியாக சென்று, வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம் வழியாக வடசேரி செல்கிறது.



கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இருந்து பால் பண்ணை செல்ல வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.



பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை பகுதியில் சாலை சீரமைப்பு பணி நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இரவு பகலாக பணிகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 5 நாட்களில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு பகுதிகள் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது வழக்கம். இவ்வாறு தண்ணீர் தேங்குவதால் அந்த பகுதியில் தார் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்படுவது வாடிக்கை.

இதனால் பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது உண்டு. இந்த பகுதியில் போதிய அளவில் வடிகால்கள் இல்லை. இதனால் பேட்ஜ் ஒர்க் பணிகள் நடைபெற்றாலும் சில நாட்களிலேயே மீண்டும் பள்ளம் ஏற்பட தொடங்கிவிடும். தற்போது அந்த பகுதியில் காங்கிரிட் போடப்பட்டு பேவர் பிளாக் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இனியேனும் மழைக்கால பாதிப்புகளில் இருந்து இப்பகுதிகள் விமோசனம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...