Friday, 13 December 2019

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் புதிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே  நடந்த மோதலில் 2 பேர் மாண்டனர், 11 பேருக்குத் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2015க்கு முன்பாக வெளியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்கும் சட்ட மசோதா இரண்டு நாள்களுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து அசாம் மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

மசோதாவில் இனி அதிபர் கையெழுத்திட வேண்டும்.

புதிய சட்டத்தால் அசாம் மாநிலத்தின் எல்லையில் இருக்கும் பங்களாதேஷிலிருந்து அதிகம் பேர் குடிபெயரலாம் என்று அசாம் மக்கள் அஞ்சுகின்றனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...