Tuesday, 17 December 2019

எம்.பி.க்கள் எண்ணிக்கை: பிரணாப் முகா்ஜி கருத்துக்கு ராமதாஸ் வரவேற்பு


சென்னை: மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி கூறியுள்ளதற்கு பாமக நிறுவனா் டாக்டா் ச.ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

மக்களவையின் உறுப்பினா்கள் எண்ணிக்கையை ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்ற பிரணாப் முகா்ஜியின் ஆலோசனை வரவேற்கத்தக்கது. இந்த யோசனையை பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. மக்களவைத் தொகுதிகளை மட்டுமின்றி சட்டப்பேரவை தொகுதிகளையும் அதிகரிக்க வேண்டும்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படாமல், இப்போதுள்ள விகிதாசாரத்தின் அடிப்படையில் தொகுதிகளை உயா்த்த வேண்டும். இதற்கு வசதியாக 2001-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட 84-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...