கும்பகோணம்: கும்பகோணம் கிழக்கு ஒன்றியம் உள்ளூர் ஊராட்சி மன்ற தேர்தலில் திமுகவுக்கு, பாமக ஆதரவு தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் கிழக்கு ஒன்றியம் உள்ளூர் ஊராட்சி 12வது வார்டில் போட்டியிட பாமகவுக்கு சீட் ஒதுக்க வேண்டுமென கூட்டணி கட்சியை சேர்ந்த அதிமுகவிடம் பாமகவினர் கேட்டிருந்தனர். ஆனால் அந்த வார்டை பாமகவுக்கு அதிமுக ஒதுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பாமகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி துணை தலைவர் மாது, மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், ஒன்றிய துணைத்தலைவருமான அழகர், அமைப்புசாரா தொழிற்சங்க துணைத்தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கும்பகோணம் திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் மற்றும் ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். மேலும் திமுக சார்பில் 12வது வார்டில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதோடு, அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வி அடைவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment