சென்னை,
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் நீங்கலாக கிராம அளவில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
*மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
* முதல்கட்டமாக வெளியான இந்த பட்டியலில், தேனி, கிருஷ்ணகிரி, அரியலூர், சேலம், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment