Wednesday, 18 December 2019

குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லீமை ஒன்றும் செய்யாது: முஸ்லீம் மத தலைவர்


புதுடில்லி : தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய குடியுரிமை சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை ஒன்றும் செய்யாது என டில்லி ஜூம்மா மசூதி தலைவர் ஷாஹி இமாம் சையது அகமது புஹாரி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டில்லி பல்கலை.,யில் துவங்கிய வன்முறை போராட்டம், நாடு முழுவதும் பரவி உள்ளது. போராட்டக்காரர்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டிலும் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் இந்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டம் மற்றும் இதனை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் குறித்து இஸ்லாமிய இயக்க தலைவர் இமாம் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது : போராடுவது இந்திய மக்களின் ஜனநாயக உரிமை. போராடுவதை யாரும் தடுக்க முடியாது. அதே சமயம், அது கட்டுக்குள் இருக்க வேண்டியதும், உணர்வுகள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதும் முக்கியம். குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவிற்கும் வித்தியாசம் உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய குடிமக்கள் பதிவு சட்டமாக்கப்படவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ், பாக்., ஆப்கான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் வந்த முஸ்லீம்கள் மட்டுமே குடியுரிமை பெற முடியாது. இந்தியாவில் வாழும் முஸ்லீம்களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...