Wednesday, 18 December 2019

தகாத உறவு இல்லை.. என் மீது அவதூறு பரப்புகிறார்.. அவர் மீது நடவடிக்கை எடுங்கள்.. மகாலட்சுமி புகார்!


சென்னை: தன் மீது அவதூறு பரப்பும் ஜெயஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீரியல் நடிகை மகாலட்சுமி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நடிகை மகாலட்சுமி. தொடர்ந்து முன்னணி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார் மகாலட்சுமி.

இந்நிலையில் மகாலட்சுமிக்கும் தனது கணவர் ஈஸ்வருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவியான நடிகை ஜெயஸ்ரீ குற்றம் சாட்டினார். மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதற்காக ஈஸ்வர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் போலீஸில் புகார் அளித்தார்.

இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட ஈஸ்வர், தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜெயஸ்ரீ மீது சீரியல் நடிகை மகாலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.

அதில் அசோக் நகரில், பெற்றோர் மற்றும் நான்கு வயது மகனுடன் மகாலட்சுமி வசித்து வருவதாகவும் கணவர் அனில் என்பவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், அடையாறு, எல்.பி., சாலையில் வசித்து வரும், 'டிவி' சீரியல் நடிகை, ஜெயஸ்ரீ மற்றும் இவரது கணவரும், டிவி சீரியல் நடிகருமான ஈஸ்வருக்கும், குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது.

ஜெயஸ்ரீ புகார் அளித்ததை ஒட்டி, திருவான்மியூர் மகளிர் போலீசார், ஈஸ்வரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், டிவி சீரியல் நடிகையான மகாலட்சுமிக்கும், ஈஸ்வருக்கும் தகாத உறவு இருப்பதாக, ஜெயஸ்ரீ, சில படங்களை வெளியிட்டுள்ளார். 'ஈஸ்வரும், நானும், 'தேவதையை கண்டேன்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளோம்.

அதன் வெற்றி கொண்டாட்டத்தின் போது எடுத்த படங்கள் அவை. 'ஈஸ்வருக்கும் எனக்கும் எந்த தகாத உறவும் இல்லை. என் மீது, ஜெயஸ்ரீ அவதுாறு பரப்புகிறார். 'அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மகாலட்சுமி புகாரில் கூறியிருப்பதாக தெரிகிறது.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த, சீரியல் நடிகையான ஜெயஸ்ரீ, ஈஸ்வரும் மகாலட்சுமியும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டார். அதேபோல் இருவரும் சாட் செய்த ரெக்கார்டுகளையும் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...