Wednesday, 18 December 2019

ஹீரோ நிச்சயம் சூப்பர் ஹீரோவாகும்… ஜார்ஜ் சி வில்லியம்ஸ் பேச்சு



சென்னை :
 ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனின் இன்னொரு முகத்தை ரசிகர்கள் இப்படத்தில் பார்ப்பார்கள் என்று ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் கூறியுள்ளார். நாங்கள் அனைவரும் மிகச் சிறப்பான படத்தை தர கடுமையாக உழைத்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.

மிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமா ஒளிப்பதிவு தளத்தில் மிகவும் பிரபலமான ஒருவராக மாறியிருக்கிறார் ஜார்ஜ் C வில்லியம்ஸ். கதையின் மையத்தோடு இணைந்து திரையில் அவர் எழுதும் ஒளிக்கவிதைகள் இந்தியா முழுதும் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது. அவரது ஒளிப்பதிவில் விரைவில் வெளியாகவுள்ள படம் "ஹீரோ".

இப்படம் குறித்து ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் C வில்லியம்ஸ் நம்மிடம் பகிர்ந்து கொண்ட சில தகவல்கள். "ஹீரோ" அதன் பெயரில் சொல்லப்பட்டிருப்பது போலவே நாட்டில் நிலவும் மிக முக்கியமான பிரச்சனையை எல்லோருக்கும் சென்று சேரும் விதத்தில் பேசும் படைப்பாக இருக்கும். தயாரிப்பாளர் கொட்டாப்பாடி J ராஜேஷ் இல்லையென்றால் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது. அவர் தான் இப்படம் பெருமளவு ரசிகர்களை சென்றடையும் வகையில் மிகப்பிரமாண்டமான முறையில் வெளியிடுகிறார். இப்போது முழுப்படமாக இப்படத்தை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சிறு கருவாக இருந்த இந்தப் படத்தினை ஒவ்வொரு நடிகர்களும், ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும் இணைந்து இந்தளவு மிகப்பெரிய படமாக உருவாக்கியுள்ளார்கள்.

நான், மித்ரன், சிவகார்த்திகேயன் மூவரும் நண்பர்களாக இருப்பதும் ஒத்த கருத்துகள் கொண்டிருப்பதும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது. சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவர் நடிப்பின் இன்னொரு முகத்தை இப்படத்தின் மூலம் பார்ப்பார்கள். இப்படம் நிச்சயம் சூப்பர் ஹீரோவாக இருக்கும் என்றார்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜீன் மிகத் திறமையான நடிகர், அவரது நடிப்பு படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் இருவரும் தங்கள் நடிப்பால் படத்திற்கு மேலும் மெருகேற்றி உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரும் பலம். நாங்கள் அனைவருமே அவரின் தீவிர விசிறிகள்.

நாங்கள் அனைவரும் மிகச் சிறப்பான படத்தை தர கடுமையாக உழைத்திருக்கிறோம் படத்தை உருவாக்கும் போது நாங்கள் அடைந்த இன்பத்தை ரசிகர்கள் படம் பார்க்கும் போது அடைவார்கள் என உறுதியாக நம்புகிறேன் என்றார். இப்படம் டிசம்பர் 20ந் தேதி வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...