Friday, 13 December 2019

திண்டிவனத்தில், மினி லாரி மோதி நிதி நிறுவன ஊழியர் பலி

திண்டிவனம், 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கீழ்நம்மண்டி கோரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முத்துராஜா(வயது 25). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் திண்டிவனத்தில் சில வாடிக்கையாளர்களிடம் நிதி வசூலித்து விட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளில் கோரக்கோட்டைக்கு புறப்பட்டார். திண்டிவனத்தில் உள்ள செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த மினி லாரி மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்துராஜா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...