புதுடெல்லி,
செல்போன்களில் ஒரு தொலைத்தொடர்பு நிறுவன இணைப்பில் இருந்து வேறு நிறுவன இணைப்புக்கு பேச ஒரு நிமிடத்துக்கு 6 பைசா, கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை அழைப்பு மேற்கொண்ட நிறுவனம், அழைப்பை பெற்ற நிறுவனத்துக்கு செலுத்தி வருகிறது. இந்த கட்டணம், வருகிற ஜனவரி 1-ந்தேதியுடன் ரத்துசெய்யப்படுவதாக இருந்தது.
ஆனால், இது அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிவரை நீடிக்கும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ நேற்று அறிவித்தது. 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இக்கட்டணம் ரத்தாகும் என்று தெரிவித்தது.
No comments:
Post a Comment