சென்னை சாலிகிராமம் 6வது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(35). பிரபல நடிகை பாபிலோனாவின் சகோதரர். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் விக்னேஷ் தகராறு செய்து வந்ததாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உதவி ஆய்வாளர் பழனி மற்றும் காவலர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்ட விக்னேஷிடம் விசாரணை நடத்தினர். அப்போது போதையில் இருந்த அவர், திடீரென காவலர் சங்கரை என்னையே பிடிக்கிறியா என்று கூறி பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் காவலர் சங்கர் படுகாயமடைந்தார். உடனே உதவி ஆய்வாளர் பழனி, காவலரை தாக்கிய விக்னேஷை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது, காவலர் சங்கர் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல், காயம் ஏற்படும் வகையில் தாக்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடிகை பாபிலோனாவின் சகோதரர் விக்னேஷை போலீசார் கைது ெசய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சாலிகிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment