விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வருவாய் கோட்டத்தில் உள்ளடங்கிய செஞ்சி,மயிலம்,திண்டிவனம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வாக்காளர் பட்டியல் இன்று காலை 10.15 மணியளவில் திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் செஞ்சி,மயிலம், திண்டிவனம்(தனி) சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் திண்டிவனம் சார் ஆட்சியர் மடாக்டர். அனு அவர்களால் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது அதில் செஞ்சி 304 வாக்குச்சவடிகளில் ஆண் வாக்காளர்கள் -125053, பெண் வாக்காளர்கள்-126552 இதரர்-33 மயிலம்265 வாக்குச்சவடிகளில் ஆண் வாக்காளர்கள்-106749 பெண் வாக்காளர்கள்-105971 இதரர்-16 திண்டிவனம்(தனி)264 வாக்குச்சவடிகளில் ஆண் வாக்காளர்கள்-109261 பெண் வாக்காளர்கள்-111265 இதரர்-5 என மூன்று சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது மேற்படி வாக்காளர் பட்டியல் அனைத்தும் வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று வெளியிடப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்திட வேண்டும் என்றும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகிய பணிகள் 01.01.2020 தேதியை தகுதியான நாளாக கொண்டு 24.12.2019முதல்03.02.2020 வரை நடைபெறும் மேலும் 04.01.2020,05.01.2020 மற்றும் 11.01.2020,12.01.2020ஆகிய தினங்களில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது முகாமில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்ய உரிய மனுக்கள் அளிக்க வேண்டும். பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக ERONET.IN என்ற இனையதளம் மூலமாகவும் மற்றும் நேரடியாக தேர்தல் அலுவலகத்தின் வாயிலாகவும் தங்களின் மனுக்களை பதிவு செய்து கொள்ளலாம். எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இன் நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் ராஜசேகர் கோவிந்தராஜ் துணை வட்டாட்சியர்கள் ரபியுல்லா ரமேஷ் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ் தேர்தல் உதவியாளர் சந்திரமோகன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் சித்தார்த்தன்,பழனி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment