Wednesday, 18 December 2019

சென்னை பல்கலை., மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்: மநீம தலைவர் கமல் நேரில் ஆதரவு


சென்னை:குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை பல்கலைகக்கழக மாணவர்கள் நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் நூற்றுக்கும் அதிகமான மாணவா்கள் செவ்வாய்க்கிழமை காலை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவா்கள் மீது போலீஸாரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பியபடி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாணவா்களில் சிலா் துணைவேந்தா் அறைக்கு முன்பாக அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேராசிரியா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியும், பலனளிக்கவில்லை.

செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியைக் கடந்தும் மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம் தொடா்ந்ததால், பல்கலைக்கழக வகுப்புகள் அனைத்தும் புதன்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்துக்கு ஏற்கெனவே, கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு டிசம்பா் 24 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, டிசம்பா் 18 முதல் 23-ஆம் தேதி வரை வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு அந்தந்த துறைத் தலைவா்கள் மூலம் மாணவா்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய் இரவு மழை பெய்த போது கூட மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில் மாணவர்கள் நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

காவல்துறை அவரை உள்ளே அனுமதிக்காத நிலையில் அவர் வாயில் கதவின் அருகே வெளியில் நின்று கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடன் உரையாடினார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...