Sunday, 15 December 2019

உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம்: குஜராத்தில் அடுத்த ஆண்டு திறப்பு

ஆமதாபாத்: குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேல் மைதானம், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்து வருகிறது. 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் தான் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமாக உள்ளது. இங்கு ஒரு லட்சத்து 24 பேர் அமரலாம். இதை முறியடிக்க 2015ல் குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. ஆமதாபாத் நகரின் மொடிரா பகுதியில் 1982ல் உருவாக்கப்பட்ட சர்தார் படேல் மைதானத்தை புதுப்பிக்க களமிறங்கியது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் எண்ணமும் இதற்கு புத்துயிர் அளித்தது. சபர்மதி நதிக்கரையோரம் உள்ள மைதானத்தை பிரமாண்டமாக மாற்ற, 2015ல் இடிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் திறக்கப்பட உள்ளது. உலகத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் (1 லட்சத்து 10 ஆயிரம்) என்ற பெருமையை பெறவுள்ளது. ஆசிய 'லெவன்', உலக 'லெவன்' அணிகளுக்கு இடையிலான கண்காட்சி போட்டி நடத்தும் வாய்ப்பு உள்ளது. இதன் சிறப்புகள்* குஜராத்தில், உலகின் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை அமைத்த லார்சன் அன்ட் டர்போ நிறுவனம் தான் மைதானத்தின் வடிவம், கட்டுமான பணிகளை ஏற்றுள்ளது.* மொத்தம் 63 ஏக்கர்* திட்ட மதிப்பு ரூ.

700 கோடி * 3 ஆயிரம் கார், 10 ஆயிரம் இரு சக்கர வாகனம் நிறுத்தலாம்.* ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தப்படும் நீச்சல் குளம், 50 அறைகள், 4 'டிரெசிங்' ரூம்.* சூரியஔி மின்சார தகடுகள் பொருத்தப்படும்.* 11 ஆடுகளங்கள். * மழையால் ரசிகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சிறந்த மேற்கூரை * மைதானத்தில் மழைநீரை வெளியேற்றும் வசதி சிறப்பாக அமைக்கப்பட உள்ளது. போட்டி பாதிக்கப்பட்டால், வெறும் 30 நிமிடங்களில் மீண்டும் ஆட்டத்தை துவக்கலாம். * எவ்வித துாணும் இல்லாமல், விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. எங்கிருந்து பார்த்தாலும் போட்டியை தெளிவாக காண முடியும்.* இந்தியாவில் தற்போதுள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான ஈடன் கார்டனை (66 ஆயிரம் பேர் அமரலாம்) முந்தும்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...