மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த வல்லாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அசோகன். இவர் இன்று அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். செட்டியார் பட்டி பகுதியில் பயிற்சி மேற்கொண்டபோது, சில மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment