Saturday, 14 December 2019

இரண்டரை வயது சிறுவன் உலக சாதனை

உலகளாவிய கார்களின் லோகோவை பார்த்து நிறுவன பெயர்களை கூறுதல், உலக நாடுகளின் கொடிகளை பார்த்து எந்த நாடு என கூறுதல் உள்ளிட்டவற்றின் மூலம், சென்னையை சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் உலக சாதனை முயற்சி செய்துள்ளான்.

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த யோகேஷ் சர்மா, நிஷா சர்மா தம்பதியினரின், இரண்டரை வயது மகன் ஷிட்டான்ஷ் சர்மா. இவர், 37 கார்களின் லோகோவை பார்த்து நிறுவன பெயர்களை கூறியும், 62 உலக நாடுகளின் கொடிகளை பார்த்து எந்த நாடு எனவும், 15 வகையான காய்கறிகள் மற்றும் பழங்களின் பெயர்களையும், 17 வகையான விலங்குகளின் பெயரை அடையாளம் காட்டியும் கின்னஸ் சாதனை முயற்சி செய்துள்ளார்.

இந்த சாதனை மூலம், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 1 மாதம் தொடர்ந்து பயிற்சி அளித்து இந்த உலக சாதனை முயற்சி செய்ததாகவும், குழந்தையின் இந்த சாதனை தனக்கு பெருமை அளிப்பதாகவும் சிறுவனின் தந்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...