திண்டிவனம்
ஆ. கோவிந்தசாமி அரசு கலை , அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் உள்ள நல்லிய கோடன் அரங்கில் நடைபெற்ற
கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் கணேசன் தலைமை தாங்கினார்.
இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் லதா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் களாக படிக வளர்ச்சி மற்றும் உயிர் இயற்பியல் துறையின் துணை இயக்குனர் முனைவர் குணசேகரன் மற்றும் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை, அரசு மகளிர் கலைக்கல்லூரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி சன்யால் துவக்க உரையாற்றினார் நிகழ்ச்சி முடிவில் முனைவர் சுஜா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இயற்பியல் துறையை சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிருபர்
ச. சரண்ராஜ்
திண்டிவனம்

No comments:
Post a Comment