புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வடுகாட்டில் வாக்கு சேகரிக்கச் சென்ற ஸ்கார்பியோ கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் பாலாஜி (17) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த பிரவீன் (17) என்ற இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காக ரவிச்சந்திரன் என்பவர் ஆமாஞ்சி பஞ்சாயத்தில் போட்யிடுகிறார். மேலப்பட்டு, வடுகாடு ஆகிய பகுதிகளில் ரவிச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தனது தந்தைக்கு உதவுவதற்காக மகன் பிரவீன் மற்றும் தனது நண்பர் பாலாஜி ஆகிய இருவரும் ஸ்கார்பியோ காரில் சென்றுள்ளனர். கார் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் வடுகாடு கிராமம் அருகே வாகனம் சென்று கொண்டிருக்கையில், வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்துடன் சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியுள்ளது.
இதில், வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த பாலாஜி (17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரவீன் (17) பலத்தக் காயம் அடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி பாலமுருகன், ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் தீயணைப்புத்துறையினர் பொதுமக்களின் உதவியோடு படுகாயமடைந்த பிரவீனை மீட்டு அறந்தாங்கி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பாலாஜியின் உடலை மீட்டு உடற்க்கூறு ஆய்விற்க்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நண்பரின் தந்தைக்காக வாக்கு சேகரிக்கச் சென்ற வாலிபர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment