புதுடெல்லி:
முக்கிய பதவிகளில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், அவரது உத்தரவு தற்போதுவரை அமல்படுத்தப்படவில்லை. அத்தகைய அதிகாரிகள் யாரும் மாற்றப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே, இதை கடுமையாக எடுத்துக்கொண்ட ரெயில்வே வாரியம், உத்தரவை அமல்படுத்துமாறு ரெயில்வே தலைவரை வலியுறுத்தி உள்ளது. மேலும், பியூஸ் கோயல் மீண்டும் இதே உத்தரவை பிறப்பித்துள்ளார். இடமாற்றம் செய்த தகவலை ரெயில்வே தலைமையகத்துக்கு தெரிவிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment