விழுப்புரம்:
விழுப்புரம் புதுவை சாலையில் தெற்கு ரெயில்வே ஊழியர் குடியிருப்பு உள்ளது. இதன் அருகே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் தண்ணீர் தொட்டியில் வாலிபர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த வாலிபர் உடலை வெளியே மீட்டனர்.
பின்பு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விழுப்புரம் பாணம் பட்டு பாதை காந்திநகரை சேர்ந்த பத்மநாபன்(வயது 35) என்பது தெரியவந்தது. இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வேறு யாராவது பத்மநாபனை அடித்து கொலை செய்து விட்டு பிணத்தை தண்ணீர் தொட்டியில் வீசி சென்றார்களா? அல்லது அவர் குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தாரா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment