திண்டிவனம் காந்தியார் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி தொகுதி எம்எல்ஏவுமான கே.எஸ். மஸ்தான் தலைமை தாங்கினார் எம்எல்ஏக்கள் இரா. மாசிலாமணி , சீத்தா பதிசொக்கலிங்கம், மாநில மருத்துவரணி இணை செயலாளர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், முன்னால் எம்எல்ஏ சேதுநாதன்,முன்னால் மாவட்ட துணை செயலாளர் கே.அசோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுகவின் அமைப்பு செயலாளரும் மாநிலங்க வை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட மற்றும் திண்டிவனம் நகர ஒலக்கூர், மரக்காணம், மயிலம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக நகர செயலாளர் என்.வெண்ணிலா கபிலன் நன்றி கூறினார்.
நிருபர்
ச. சரண்ராஜ்
திண்டிவனம்

No comments:
Post a Comment