Tuesday, 17 December 2019

ஜீத்து ஜோசப் இயக்கும்… மோகன்லால் த்ரிஷாவின் ராம்


சென்னை : 

மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் ராம் படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாபநாசம், தம்பி படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இப்படத்தை இயக்குகிறார்.

நடிகை த்ரிஷா தமிழில் கடைசியாக 96 படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் இவர் நடித்த ஜானு என்ற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பெரிதும் பேசப்பட்டது. இதையடுத்து, பேட்ட படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்து கௌரவ வேடத்தில் நடித்து இருப்பார்.

த்ரிஷா தற்போது மோகன்லாலில் ராம் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள இயக்குனரான ஜீத்து ஜோசப் தற்போது தமிழில் தம்பி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் வரும் டிசம்பர் 20 வெளியா உள்ளது. இதனையடுத்து அவர் மீண்டும் மலையாளத்தில் நடிகர் மோகன்லாலை வைத்து படம் இயக்கு உள்ளார். இந்த படத்தின் முதல் பார்வை தற்போது வெளியிடப்பட்டது.

மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ராம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் தமிழில் பாபநாசம், தம்பி படத்தை இயக்கி இயக்குனர் ஜீத்து ஜோசப் இப்படத்தை இயக்குகிறார். ரமேஷ் பி பிள்ளை மற்றும் சுந்தர் பி பிள்ளை ஆகியோர் அபிசேக் பிலிம்ஸ் கீழ் தயாரித்து இருக்கின்றனர் .

தற்போது இந்த படத்தின் தலைப்பை கேட்டவுடன் மேலும் இந்த படத்தில் த்ரிஷா நடிக்க போவது தெரிந்தவுடன் அனைவருக்கும் ஞாபகம் வந்தது 96 படம்தான். அந்த அளவுக்கு ராம் மற்றும் ஜானுவின் காதல் ரசிக்கும் படியாக இருந்ததால் தமிழக ரசிகர்கள் அப்படத்தை பெரிதும் கொண்டாடினார்கள்.

த்ரிஷா அடுத்தபடியாக தொடர்ந்து 6 தமிழ் படங்கள் கைவசம் உள்ளன. கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, ராங்கி, சுகர் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கிறார். இதனால் இவரது தீவிர ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...