Friday, 13 December 2019

சாத்தான்குளம் TDTA பள்ளிமீது குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள TDTA  தேசிய மேனிலைப் பள்ளியில்
10:12:2019 அன்று கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அந்நிகழ்ச்சிக்காக 12 ம் வகுப்பு அ' பிரிவு மாணவர்களை கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பள்ளிக்கு ஊர்வலமாக வரும்படி நிகழ்ச்சி அமைத்துள்ளார்கள்.
இதற்காக பள்ளி நிர்வாகமும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களை இரு சக்கர வாகனத்தில் வரும் படி கூறி உள்ளனர்.பள்ளி வேலை நேரத்தில் மாணவர்களை பள்ளி வளாகத்தை விட்டு வெளியே அனுப்பியது மிகவும் தவறு.18 வயது பூர்த்தியாகாத மாணவர்களை இரு சக்கர வாகனத்தில் வரும் படி கூறியது இந்திய தண்டனை  சட்டத்தின் படி மிகவும் குற்றச்செயலாகும்.
இந்த நிகழ்ச்சியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவர்  M.முத்து கிருஷ்ண குமார் என்பவர் மதியம் 3:00மணியளவில் வாகன விபத்தில் சிக்கி படுகாயம் மற்றும் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவரின் பெற்றோர் கேட்டதற்கு மிகவும் அலட்சியமாக பதில் கூறிஉள்ளனர்.இதில் பள்ளி நிர்வாகம் செய்த தவறு
1.பள்ளி வேலை நேரத்தில் மாணவர்களை பள்ளி வளாகத்தை விட்டு வெளியே அனுப்பியது..2.மாணவர்கள் 18 வயது பூர்த்தியாக வில்லை.அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என தெரிந்தும் அவர்களை இருசக்கர வாகனத்தில் வரும் படி கூறியது
இந்திய தண்டனை சட்டத்தின் படி குற்றமாகும்.இந்த குற்ற செயலை மறைப்பதற்கு பள்ளி நிர்வாகமும் ஆசிரியரும் மாணவர் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்...மாணவருக்கு எலும்பு முறிவு குணமாக இன்னும் 2 மாதம் ஆகும்..ஆனால் 12 ம் வகுப்பு பொது தேர்வுக்கு இன்னும் 3 மாத காலமே உள்ளது.அவனது கல்வி கேள்விக்குறியாக உள்ளது...அவனது இந்த நிலைமைக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களே முழு பொறுப்பு ஆகும்.
இது குறித்து மாணவரின் பெற்றோர் முறைப்படி மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் புகார் மனு அனுப்பி உள்ளார்.பள்ளி கல்வித்துறை இது குறித்து விசாரணை செய்து சம்பந்த பட்ட நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீது துறை
ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு...

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...