𝑫𝒆𝒔𝒊𝒂𝒌𝒂𝒕𝒉𝒊𝒓 𝑵𝒆𝒘𝒔:
அந்தியூர்: அந்தியூர் சுற்று வட்டாரத்தில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில், மக்காச்சோளம் அறுவடை தொடங்கியுள்ளது. நல்ல லாபம் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான, புதுப்பாளையம், எண்ணமங்கலம், அத்தாணி, வெள்ளித்திருப்பூர், பூனாட்சி உள்ளிட்ட பகுதிகளில், மானாவாரியில் ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான ஏக்கரில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நடப்பாண்டு மழை கை கொடுத்ததால், 10 ஆயிரம் ஏக்கரில், மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். அவ்வப்போது மழை பெய்ததால், பெரும்பாலான இடங்களில், பயிர் செழித்து வளர்ந்தது. தற்போது பல இடங்களில் அறுவடை தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஐந்து ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், விவசாயிகள் குறைந்த அளவிலேயே மக்காச்சோளம் பயிரிட்டனர். நடப்பாண்டு பருவமழை கை கொடுத்ததால், சாகுபடியை கைவிட்ட பலரும், மக்காச்சோளம் விதைத்தனர். இதனால் சாகுபடி பரப்பு அதிகரித்தது. மழை பெய்ததால், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து, 90 நாள் பயிரான, மக்காச்சோள விளைச்சலுக்கு கை கொடுத்தது. தற்போது அறுவடை தீவிரமாக நடக்கிறது. ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
No comments:
Post a Comment