𝑫𝒆𝒔𝒊𝒂𝒌𝒂𝒕𝒉𝒊𝒓 𝑵𝒆𝒘𝒔:
ஈரோடு: கணவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்தவர்கள் மீது, நடவடிக்கை கோரி, ஈரோடு கூடுதல் எஸ்.பி.,யிடம், மனைவி மனு கொடுத்தார்.
ஈரோடு அருகேயுள்ள, முள்ளாம்பரப்பை சேர்ந்தவர் மல்லிகா, 35; ஈரோடு கூடுதல் எஸ்.பி., சார்லசிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என் கணவர் வினோத் கண்ணன், 38; கால் டாக்சி டிரைவர். எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. அப்பகுதியில் ஐந்து ஆடுகள் காணாமல் போய் விட்டது. என் கணவரை சந்தேகப்பட்டு, கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். தாலுகா போலீசார் விசாரித்து, வீட்டுக்கு செல்லலாம் என கூறினர். பிறகு, நெஞ்சுவலி வந்து விட்டது. அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று எழுதி, என்னிடம் கையெழுத்து பெற்றனர். அவரை கைது செய்வதற்கே, கையெழுத்து வாங்கினர் என்பது பிறகு தெரிந்தது. அவர் எந்த தவறும் செய்யவில்லை. ஊர்மக்கள் அடித்ததால்தான் நெஞ்சுவலி வந்தது. அவரை அடித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கணவருக்கு மற்றொரு மனைவியும் உள்ளார். எங்கள் இரு குடும்பத்தையும் காக்கும் வகையில் நடவடிக்கை வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment