Friday, 20 December 2019

தோழி சமந்தாவுடன் திருப்பதிக்கு நடந்தே சென்ற விஜே ரம்யா


திருப்பதி : வி.ஜே மற்றும் நடிகையான ரம்யா சுப்ரமணியன் அவரது நெருங்கிய தோழியான சமந்தாவும் திருப்பதிக்கு நடந்தே சென்று இருக்கிறார்கள்.

அதை பற்றி தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ள ரம்யா. இதனுடன் ரம்யா சமந்தாவுடன் எடுத்த இரு போட்டோகளையும் பதிவேற்றி இருந்தார்.

2019 ஆண்டுக்கு முதலில் நன்றி தெரிவித்தார். மேலும் 2019 எல்லாவற்றையும் தந்து விட்டது இதோ 2020 வந்து விட்டது. இதனால் மிக மகிழ்ச்சியாகவும் ஆசிர்வதிக்கபட்டதாகவும் உணர்கிறேன் நன்றி என்றார். ஒரு நல்ல நடைபயணத்திற்கு பிறகு என் தோழியுடன் திருமலை திருப்பதியை அடைந்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். மேலும் இதனுடன் ரம்யா சமந்தாவுடன் எடுத்த இரு போட்டோக்களையும் பதிவேற்றி இருந்தார்.

ரம்யா மற்றும் சமந்தாவும், நடந்தே திருப்பதி செல்வது வழக்கம் தான். இவர்கள் இருவரும் இதற்கு முன்பே பல முறை இப்படி நடந்து சென்றுள்ளார்கள். ரம்யா மற்றும் சமந்தா இருவருமே உடற்பயிற்சியில் மிகுந்த கவனம் செலுத்துபவர்கள் அதனால் அவர்களுக்கு இந்த நடை பயணம் பெரிய சிரமமாக இல்லை. இதனால் இவர்கள் இதனை துணிச்சலுடன் செய்து வருகிறார்கள் .

ரம்யா கடைசியாக அமலா பால் நடித்த ஆடை படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தை இயக்குனர் ரத்னகுமார் இயக்கி இருந்தார். பல கலவையான விமர்சனங்களுக்கு இடையே படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது .

ரம்யா மேலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர் மற்றும் ஆடை. ரம்யா அடுத்ததாக தளபதி 64ல் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் .

ரம்யா சுப்ரமணியன் தொகுப்பாளராக தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். விஜயின் மெர்சல் மற்றும் பிகில் பட இசைவெளியீட்டை தொகுத்து வழங்கியவர் ரம்யா தான். இவர் தொகுத்து வழங்கும் போது எந்த ஒரு இடையூறும் இல்லதாபடி சரியான முறையில் தொகுத்து வழங்குவார். அண்மையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி தனது ரேஞ்சை உயர்த்தி உள்ளார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...