நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தொண்டை அடைப்பான் நோய்க்கு 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் அருகே தொ.ஜேடர்பாளையம் பகுதியில் வசித்து வரும் சரவணன் என்பவரின் மகன் ஸ்ரீசங்கரன், திருச்சி திருப்பந்துரையில் உள்ள குருகுல பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சளி காய்ச்சல் ஏற்பட்டு, கோவை அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஸ்ரீசங்கரனுக்கு தொண்டை அடைப்பான் நோய் தாக்கியது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையடுத்து தொ.ஜேடர்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment