பா.ஜ.க. அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிரைவேற்றப் பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத்தை கேரள மாநிலத்தில் செயல்படுத்த முடியாது என்று முதலமைச்சர் திரு.பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ள அவர், மத்திய அரசு மதத்தின் அடிப்படையில் நாட்டை துண்டாட முயற்சிப்பதாகவும், இந்த நடவடிக்கை நாட்டில் சமஉரிமையையும், மதச்சார்பற்ற கோட்பாடுகளையும் சிதைத்துவிடும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா பலகலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் குடியுரிமையை மதத்தின் அடிப்படையில் தீர்மானிக்க அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சட்டத்தை எதிர்த்து அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால், கொல்கத்தாவில் இருந்து இந்த மாநிலங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை தலைவர் பதவியில் இருக்கும் Abdur Rahman என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சட்டத்திற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் விதமாக தனது பதவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment