பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநர் சுகன்யா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்து தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அதற்குரிய சான்றிதழ்களை பள்ளிகளில் சமர்ப்பித்து இலவச மடிக்கணினிகளை பெற்றுக் கொள்ள ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கான கால அவகாசம் இன்றுடன் (டிசம்பர் 16) முடிவடைகிறது. எனவே, தகுதியுள்ளவர்கள் உரிய சான்றுகளை சமர்ப்பித்து மடிக்கணினி பெற்றுக் கொள்ளலாம். மேலும், கூடுதலாக மடிக்கணினிகள் தேவைப்பட்டாலோ அல்லது மடிக்கணினிகள் மீதம் இருந்தாலோ அதன் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் நாளைக்குள் (டிச.17) இயக்குநரகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment