Tuesday, 17 December 2019

22 வயசு பிரியாவுக்கு ஏன் இந்த வேலை.. இந்த வயசிலேயே இப்படியா.. அப்படியே ஷாக் ஆன போலீஸ்!


சென்னை: 
22 வயசு ப்ரியாவுக்கு ஏன் தான் இந்த பொழப்பு என தெரியவில்லை.. இந்த வயசுலேயே இப்படி ஒரு காரியத்தை செய்யும் துணிச்சலை பார்த்து போலீசாரே மிரண்டனர்.

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி வடசென்னையின் முக்கியமான ஆஸ்பத்திரியாக உள்ளது. அதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கானோர் புற நோயாளிகளாகவும், சிகிச்சை பெறுபவர்களை பார்த்து விட்டு செல்லக்கூடியவர்களாகவும் இருப்பர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்க்க வரும் சொந்தக்காரர்களிடம் ஒரு பெண் ஓடிப்போய் பேசுவார்.. "என் அப்பாவுக்கு ரொம்ப முடியல.. ஆஸ்பத்திரியில ட்ரீட்மென்ட்டில் இருக்கார்.. செலவுக்கு கையில் பணம் இல்லை.. இருந்த பணத்தை புரட்டி தந்துட்டேன்.. இன்னும் தேவைப்படுது.. என்கிட்ட இப்போதைக்கு இந்த 2 கிராம் எடை தங்க நாணயம்தான் இருக்கு.. இதை வாங்கிக்கிட்டு, அதுக்கு பதிலா 1500 ரூபாய் தந்தா போதும்.." என்றார்.
இவ்வளவு பரிதாபமாகவும், துல்லியமாக 1500 ரூபாய் கேட்கவும், பொதுமக்களும் இவர்மீது இரக்கப்பட்டு, நாணயம் வாங்கி கொண்டு 1500 ரூபாய் தந்துவிடுவார்கள்.. அதற்கு பிறகுதான் அது டூப்ளிகேட் காயின் என்பது தெரியவரும். இப்படி இளைஞர்கள் முதல் வயசானவர்கள் வரை, இந்த 2 கிராம் நாணயம் & 1500 ரூபாய் என்றே இவரது மோசடி நடந்து வந்துள்ளது.
ஒரே மாதிரியான புகார் வண்ணாரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவும்தான், போலீசார் தீவிரமாக கண்காணித்து அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். பெயர் ப்ரியா... வயசு 22.. நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவராம்.. இவர் குறி வைத்தது ஸ்டான்லி ஆஸ்பத்திரிதான்.. அங்கு வரும் நோயாளிகளின் உறவினர்களிடம்தான் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் பிரியா ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார்.. கூடவே அதே ஆட்டோவில் ஒரு பாட்டியும் வந்துள்ளார்.. "இந்த பக்கம் வழிப்பறி திருடர்கள் அதிகமாச்சே.. கழுத்தில் செயின் போட்டுட்டு போனீங்கன்னா அறுத்துட்டு போய்டுவாங்க" என்று நைசாக பேசி 2 பவுன் நகையை கழற்றி வாங்கி, அவரது பர்ஸில் வைக்குமாறு சொல்லி.. அந்த பர்ஸை ப்ரியா ஆட்டைய போட்டு சென்றிருக்கிறார்.
இப்போது போலீசார் பிரியாவை கைது செய்து புழலில் அடைத்துள்ளனர். 3 பவுன் நகையுடன், எல்லோரிடமும் காட்டி ஏமாற்றிய அந்த கவரிங் நாணயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...