சென்னை : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஆன்ட்ரியாவும் ஒருவர் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடிப்பார்.
பாடகியான ஆன்ட்ரியா கௌதம் மேனனின் பச்சைகிளி முத்துசரம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். இவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தனது மேல்படிப்பிற்காக அரங்கோணத்திலிருந்து சென்னை வந்தார்.
ஆன்ட்ரியா பிரபலமான பாடகி இவரின் குரலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவான கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் தான் சினிமாவில் ஆன்ட்ரியாவுக்கு முதல் பாடல். முதல் பாடலே பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. அதன் பின் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கணிசமான பாடல்களை பாடி உள்ளார்.
ஆன்ட்ரியா பச்சைகிளி முத்துசரம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருப்பார். மேலும் மங்காத்தா , சகுனி, அன்னையும் ரசூலும், விஸ்வரூபம், அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், தரமணி மற்றும் துப்பறிவாளன் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார் .மேலும் மலையாளம், தெலுங்கிலும் கூட அதே நேரத்தில் நடித்து வந்தார் .
கடந்த வருடம் வெற்றிப்படமாக பேசப்பட்ட வடசென்னை படத்தில் சந்திரா கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்திருப்பார். அதுவும் வட சென்னை மொழியை மிகவும் துல்லியமாக பேசி அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருப்பார் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
ஆன்ட்ரியா தற்போது தளபதி 64 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஜயும் ஆன்ட்ரியாவும் இணைந்து இதற்கு முன் கூகுள் கூகுள் பாடலை பாடியுள்ளனர். இப்போது இவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தில் இவர்கள் இணைந்து ஏதேனும் பாடலை பாடுவார்களா என்று தெரியவில்லை.
தற்போது ஆன்ட்ரியாவுக்கு கணிசமாக நிறைய படங்கள் கைவசம் உள்ளன. வட்டம் ,மாளிகை மற்றும் தளபதி 64 படங்களில் நடித்து வருகிறார். ஆன்ட்ரியா கிடைக்கும் சமயங்களில் பல ஆல்பங்களிலும் பாடி வருகிறார். மேலும் ஆன்ட்ரியா பல இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார் .

No comments:
Post a Comment