Monday, 16 December 2019

கோத்தகிரி அருகே புலி குட்டி நடமாட்டத்தை கண்காணிக்க 7 கேமராக்கள் பொருத்தம்

ஊட்டி, டிச. 16: கோத்தகிரி வனச்சரகத்திற்குட்பட்ட, சுண்ட்டடி, சேலக்கொரை, கதகுத்துதொரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே சுமார் 1 வயது மதிக்கத்தக்க புலி குட்டி ஒன்று சாைல மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் நடமாடி வருகிறது. அங்கு தனியார் கட்டிடம் ஒன்றில் உள்ள சிசிடிவி., கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்துள்ளனர். சுண்டட்டி பகுதியில் புலி குட்டியின் நடமாட்டம் குறித்து அறிந்த நீலகிரி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் குருசாமி அறிவுறுத்தலின் பேரில் உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் மற்றும் கோத்தகிரி வனச்சரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர் புலி குட்டியின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

இதனிைடயே புலிகுட்டியின் நடமாட்டம், வேறு புலி ஏதேனும் அதனுடன் உள்ளதா என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக வனத்துறை சார்பில் 7 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சுண்டட்டி சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் நடமாடி வரும் புலிகுட்டிக்கு சுமார் 1 வயது இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் அதனுடன் தாய் புலி அல்லது வேறு புலிகள் உள்ளனவா என்பது குறித்து கண்காணிக்கும் பொருட்டு அதன் நடமாட்டம் உள்ள பகுதிகளில் 7 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதிவாகும் புகைப்படங்களை ஆய்வு செய்த பின், அதனை கூண்டு வைத்து பிடிப்பதா அல்லது வேறு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும், என்றனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...