Wednesday, 18 December 2019

"பிகில்' படத்திற்காக ஃபுட்பால் ஆட கற்றுக் கொண்டேன்!


ரெபா மோனிகா ஜான் -படவுலகில் வேறு எந்த நடிகைக்கும் இவ்வளவு நீளமான பெயர் கிடையாது.

கன்னடம், தமிழ் படங்களில் 2016- லிருந்து நடித்துக் கொண்டிருக்கும் ரெபாவின் பூர்விகம் கேரளம்.

பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் பெங்களூருவில்தான். "வேதியல்' பாடத்தில் முதுகலை படித்தவர். சின்னத் திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். "ஜேக்கபிண்டே ஸ்வர்க்க ராஜ்ஜியம்' படம் முலமாக நடிகையானவர்.

ரெபா தமிழில் அறிமுகமானது சென்ற ஆண்டில் வெளியான "ஜருகண்டி' படம் மூலமாகத்தான். "பிகில்' படத்தில் அமில வீச்சினால் பாதிக்கப்பட்டப் பெண்ணாக ரெபா நடித்திருக்கிறார்.

இதைத்தவிர, "தனுசு ராசி நேயர்களே', "மழையில் நனைகிறேன்', "ஃஎப் ஐ ஆர்' (FIR) ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை நயன்தாராவின் ரசிகை. "பிகில்' படப்பிடிப்பின் போது நயனும், ரெபாவும் இருவருக்கும் தாய் மொழியான மலையாளத்தில் பேசிக் கொண்டார்களாம்.

"நயனின் வெற்றிப் பாதை மகத்தானது. தனி ஒரு ஆளாக கஷ்டப்பட்டு தனது சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். நயனிடமிருந்து என்னைப் போன்ற வளரும் நடிகைகள் படிக்க வேண்டியது அநேகம். "பிகில்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

விஜய் சாருடன் நடிக்க ஆள் ஆளுக்குப் பறக்கும் போது எனக்கு வந்த வாய்ப்பை விடுவேனா... உடனே ஒத்துக் கொண்டேன். கல்லூரியில் கிரிக்கெட், இறகுப் பந்தாட்டம், ஹாக்கி விளையாடியிருக்கிறேன். ஆனால் பிகில் படத்தில் "ஃபுட்பால்' ஆடணும். அதனால் "பிகில்' படத்திற்காக ஒன்றரை மாதம் ஃபுட்பால் ஆட கற்றுக் கொண்டேன்.

தமிழ் உலகில் எல்லா நடிகர்களுடனும் நடிக்க வேண்டும். அதுதான் எனது ஆசை. தமிழ் வெற்றிப் படமான "நானும் ரெளடிதான்' கன்னடத்தில் "சகலகலா வல்லபா' பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் வெளிவருகிறது. தமிழில் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பேசி நடிக்கிறேன். எனக்குப் பாட வரும். படத்தில் வாய்ப்பு கிடைத்தால் பாடுவேன்'' என்கிறார் ரெபா

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...