Wednesday, 18 December 2019

கழுத்தை நெரித்து.. சாந்தி பிரியா அடித்து கொடூர கொலை.. வழக்கில் சிக்கிய வாணியம்பாடி திமுக புள்ளி!


திருப்பத்தூர்: செம்மரங்களை வெட்டிக் கடத்தி வந்த கும்பலுக்கும் புரோக்கருக்கும் நடந்த மோதலில் புரோக்கர் மனைவி சாந்திபிரியா, கழுத்தை நெரித்து.. சுவரில் தலையை முட்டி கொடூரமாகக் அடித்து கொலை செய்யப்பட்டார்... இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக திமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்.. இவருக்கு 28 வயதாகிறது.. இவரும் கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா, இளைய குமார், அசோகன், இன்னொரு பழனி ஆகியோரும் சேர்ந்து ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தும் தொழிலை செய்து வந்தனர்.

இப்படி வெட்டி வரும் செம்மரங்களை விற்பனை செய்யும்போது, அதில் வரும் பணத்தை பங்கு பிரித்து கொள்வர்.. அப்படி சமீபத்தில் பணம் பிரிக்கும்போது, சீனிவாசன் தனக்கு மட்டும் நிறைய பணத்தை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கூட்டாளிகள் போன 3-ம் தேதி சீனிவாசனின் வீட்டுக்குள் புகுந்து கடுமையான ஆயுதங்களை கொண்டு தாக்கினர். கும்பலாக கணவனை தாக்குவதை கண்ட சீனிவாசனின் மனைவி சாந்திப்பிரியா குறுக்கே நுழைந்து சண்டையை தடுக்க பார்த்தார்.. ஆனால், அந்த கும்பல் நெருக்கி தள்ளியதில், அடிபட்டு அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். சாந்திபிரியாவின் கழுத்தை நெரித்து சுவரில் தலையை முட்டி கொடூரமாகக் கொலை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினர். இதனால், திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பின்னர் கிருஷ்ணமூர்த்தி, இளையராஜா, பழனி உட்பட 6 பேரையும் போலீசார் கைது செய்திருந்தனர். இதைதவிர, ஒடுகத்தூர் அருகே பதுக்கிவைத்திருந்த 900 கிலோ செம்மரக் கட்டைகளையும் போலீஸார் கைப்பற்றினர். கணவனின் தவறான செயலால், இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த சம்பவத்தில் திமுக பிரமுகர் ஒருவர் சிக்கி உள்ளார்.

பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிஎம் முனிவேல் என்பவர்தான் அவர்.. வேலூர் மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவராக உள்ளார்.. இவர்தான் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும் விசாரணையில் தெரியவந்தது.. இதையடுத்து முனிவேலை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த பகுதியில் முனிவேல் ரொம்பவும் பிரபலமான நபராம்.. கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கும் மேலாக கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர் என்கிறார்கள்.. எனவே இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெண் கொலை வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...