அரூர்: அரூர் அருகே, பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, பள்ளி மணவி காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்தவர் ஏழாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவி. இவர், அவரது பெரியம்மா பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பெரியம்மாவின் கணவரான பெரியப்பா, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அரூர் வருவாய்த்துறையினர் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் நேற்று அந்த மாணவி தங்கியுள்ள வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சிறுமியின் விருப்பத்தின்படி அவரை, தர்மபுரி காப்பகத்திற்கு, சைல்டு லைன் அமைப்பினர் அழைத்துச் சென்று அங்கு சேர்த்தனர்.
No comments:
Post a Comment