தேர்தலில் பதவிகளை ஏலம் விடுவது காலம் காலமாக நடப்பதுதான் என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கு அஞ்சுகிறார். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் குழப்பம் இருக்கத்தான் செய்யும். ஒரே கட்சியில்கூட இரண்டு மூன்று பேர் இருக்கத்தான் செய்வார்கள். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் ஒருமித்த கருத்து இருக்காது. இது எனது கருத்து. வெங்காய விலை ஏற்றத்துக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை.
தேர்தலில் பதவியை ஏலம் விடுவது காலம் காலமாக நடப்பதுதான். யாராவது ஊருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து நான் இருக்கிறேன் என்பார்கள். இது எல்லா ஆட்சியிலும் நடந்ததுதான். ஏலம் குறித்து அரசின் கவனத்துக்கு வந்தவுடன் தற்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

No comments:
Post a Comment