உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் இன்று முடிவடைந்து, பிரச்சாரம் தீவிரமடைய உள்ள நிலையில், பல இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
மதுரை மாவட்ட ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றை முடித்து வேட் பாளர்கள் பட்டியலை வெளியிட் டுள்ளன.
இதனிடையே, வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. அப்போதுமுதல் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள மதுரை கிழக்கு, மேற்கு ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வோர் கூட்டம் அலை மோதுகிறது. தேர்தல் களத்தில் தங்களது பலத்தைக் காண்பிக்க பலர் கார், வேன், லாரி, மினி பேருந்துகளில் கிராமத்தில் இருந்து ஆட்களை திரட்டி வருகின்றனர். ஒன்றிய அலுவலகங்களில் மக்கள் குவிவதால் அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பல இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அதி காரிகள் மற்றும் போலீஸார் முறையாக அமல்படுத்தாமல் உள்ளனர். ஒன்றிய அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்ய வருவோரின் ஆதரவாளர்களை 100 மீட்டருக்கு அப்பால் போலீஸார் தடுத்து நிறுத்துவதில்லை. வேட்பாருடன் 4 பேர் மட்டுமே உள்ளே அனு மதிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையையும் யாரும் மதிப்ப தில்லை. கூட்டமாகச் சென்று தேர்தல் அலுவலர்களை சூழ்ந்து கொள்வதால், அவரது பணி பாதிக்கப்படுகிறது. பல இடங்களில் கிராமத்தில் இருந்து நகருக்கு இயக்கப்படும் மினி பேருந்துகளை வாடகைக் குப் பிடித்து, அதில் ஆட்களை ஏற்றி வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இடத்துக்கு அழைத்து வருகின்றனர். கிராமங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள், கூலித் தொழி லாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்த மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வழக்கறிஞர் முத்துக்குமார் கூறியதாவது:
தற்போது ஒன்றிய அலு வலகங்களிலும், கிராமப் பகுதி களிலும் நடைபெறும் விதிமீறல் களைப் பார்க்கும்போது, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது. தங்களது பலத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக தாராளமாக பணம் செலவு செய்து, ஆட்களை திரட்டி வருகின்றனர்.
சக்கிமங்கலம், ஆண்டார் கொட்டாரம் போன்ற பகுதி களில் இயக்கப்படும் மினி பேருந்துகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்துகின்றனர்.
அரையாண்டு தேர்வு நேரத்தில் நகர் பகுதியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக் கப்படுகின்றனர். சில இடங்களில் சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்கின்றனர். அதையும் போலீஸார் கண்டு கொள்வதில்லை. கிராமங்களில் மது பாட்டில் களை பதுக்கி வைத்து இரவு நேரங்களில் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு விநியோகிப்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
கிராமங்களில் ரோந்து பணியை போலீஸார் தீவிரப்படுத்த வேண் டும். வேட்புமனு தாக்கலுக்கு இன்று (டிச.,16) கடைசி நாள் என்பதால், கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் ஒன்றிய அலுவலகங்களுக்கு வர வாய்ப்புள்ளது. இதைப் போலீ ஸார், தேர்தல் அதிகாரிகள் கண் காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.தங்களது பலத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக தாராளமாக பணம் செலவு செய்து, ஆட்களை திரட்டி வருகின்றனர்.

No comments:
Post a Comment