தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் அருகே இருக்கும் சின்னதம்பி நாடார்பட்டியை சேர்ந்த அனந்த பெருமாள். என்பவருக்கு பன்னீர் என்ற மனைவியும், கனகராஜ், திருமலை செல்வன் என்ற இரண்டு மாற்று திறனாளி மகன்களும் இருக்கின்றனர்.
மகன்கள் இருவரும் மாற்று திறனாளிகளாக இருப்பதன் காரணமாக பெருமாள் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்திருக்கின்றார். இதன் காரணமாக கடந்த 2 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் "நீ தான் எனக்கு செய்வினை செஞ்சிட்ட" என கூறி மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க இந்த தீயானது பற்றி எரிய பெருமாள் மீதும் தீ பிடித்துள்ளது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர்.
இதில் பன்னீர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பா - அம்மா பிரச்னையில் தாய் இறந்துவிட, தந்தையோ உயிருக்கு போராடி வர மாற்றுத்திறனாளி மகன்கள் பராமரிக்க ஆள் இன்றி தவித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment