Saturday, 14 December 2019

பிளாஸ்டிக்‍ ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு : கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை ஒற்றைக்‍காலில் சைக்‍கிள் பயணம் மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி


பிளாஸ்டிக்‍ ஒழிப்பு குறித்து பொதுமக்‍களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளி ஒருவர் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை ஒற்றைக்‍காலில் சைக்‍கிளை இயக்‍கி சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்‍கு சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இடது காலை அகற்றும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, நதிநீர் இணைப்பு, மரக்‍கன்றுகள் நடுவது போன்றவற்றை வலியுறுத்தியும் ஹெல்மெட், காவலன் SOS போன்றவற்றிற்கான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதத்திலும் கன்னியாகுமரி முதல் சென்னை வரை சைக்கிள் பயணத்தை இன்று தொடங்கினார். இந்த சாதனை பயணத்தை கன்னியாகுமரி காவல்துறை துணைக்‍ கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஒற்றை காலில் சைக்கிள் மிதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மணிகண்டன், வழிநெடுக மரக்கன்றுகளை நட்டபடியே செல்கிறார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...