வாஷிங்டன்,
வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவகாரங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
மத சுதந்திரத்திற்கான மரியாதை மற்றும் சட்டத்தின் கீழ் அனைவரையும் சமமாக பாவித்தல் ஆகியவை அமெரிக்கா மற்றும் இந்தியா என்ற இரு ஜனநாயக நாடுகளின் அடிப்படைக் கொள்கைகள்.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப தனது நாட்டின் மத சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment