சென்னை: தனது திருமணம் குறித்த செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் நடிகை ரம்யா நம்பீசன்.
தமிழில், ஒரு நாள் ஒரு கனவு, ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், குள்ளநரிக் கூட்டம், சேதுபதி உட்பட சில படங்களில் நடித்தவர், ரம்யா நம்பீசன்.
மலையாளப் படங்களிலும் நடித்துவரும் இவர், இப்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில், யூடியூப் மியூசிக் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் திருமண புடையில் இவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வேகமாக பரவின. இதையடுத்து அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் செய்திகள் பரவின.
இதுபற்றி அவரிடம் பலரும் விசாரித்து வந்தனர். ஏதும் சொல்லாமல் இருந்த அவர், நேற்று பேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார்.
எப்ப கல்யாணம், கல்யாணம் கழிஞ்சா, மேரேஜ் ஆயிடுச்சா? என்று ஏகப்பட்ட விசாரிப்புகள். நான் திருமண புடவை அணிந்து வெளியான புகைப்படம், தமிழ்ப் படத்துக்காக எடுக்கப்பட்டது.
பத்ரி வெங்கடேசன் இயக்கும் படத்துக்கான ஸ்டில் அது. எனக்குத் திருமணம் ஆகவில்லை. அப்படி நான் சொல்லவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார் ரம்யா நம்பீசன்.
இதையடுத்து அவர் பற்றிய திருமண பரபரப்பு, சினிமா வட்டாரத்தில் முடிவுக்கு வந்திருக்கிறது.

No comments:
Post a Comment