Monday, 16 December 2019

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!


Tamil Nadu local body election last nomination day :ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நாள் இன்றுடன் நிறைவடைகிறது.

9 மாவட்டங்கள் நீங்கலாக தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான போட்டி, 314 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான போட்டிகள், 9,624 கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிகளுக்கான போட்டி, 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான போட்டிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்கள் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

2ம் தேதி தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியானது. 9ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல்கள் நடைபெற்று வருகிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. நாளை முதல் (டிசம்பர் 17ம் தேதி முதல்) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற டிசம்பர் 19ம் தேதி இறுதி நாளாகும். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் அதிக அளவில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல், கன்னியாகுமார் கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, கடலூர் கிழக்கு, மத்திய கடலூர், கடலூர் மேற்கு, தர்மபுரி, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கோவை புறநகர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் மற்றும் துணை முதல்வர் வெளியிட்டனர்.

தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தள அறிவிப்பின் படி இது வரையில் மாவட்ட ஊராட்சி வார்ட் உறுப்பினர் பதவிக்கு 771 நபர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர் (கட்சி அடிப்படையில்). ஊராட்சி ஒன்றிய வார்ட் உறுப்பினர் பதவிகளுக்கு 8109 நபர்கள் (கட்சி அடிப்படையில்)இதுவரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி தலைவர்களுக்கான பதவிக்கு 25044 நபர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 73150 நபர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...